ஜக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்ப்பு…
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தெமட்டகஹா பள்ளிவாசலுக்கு முன்பாக, மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலை, வன்முறைச் சம்பவங்களை கண்டித்து முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை நடத்தினர்.
இங்கு ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பேரணியாக ரொஸ்மிட் பிளேஸில் அமைந்துள்ள மியன்மார் உயர் ஸ்தானிகராலாயத்தினை நோக்கி சென்றனர்.
இதில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எம்.பைரூஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சராப்தீன் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
அதே வேளை கலகம் அடக்கும் பொலீஸார்
உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர். ஜந்து பேரை மாத்திரம் தூதரக வலாகத்துக்குள் சென்று தமது கண்டன மகஜரை கையளிக்க பொலீஸார் அனுமதியளித்தனர்.
அமைச்சர் றிசாட் , மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைருஸ் ஹாஜி,ஆசாத் சாலி ஆகியோர் மகஜரை உயர் ஸ்தானிகரிடத்தில் கையளித்தனர்.
இறுதியாக மியன்மார் நாட்டு முஸ்லிம்களுக்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது .
previous post
next post
wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.

