உள்நாட்டு செய்திகள்

‘மிஹின் லங்கா’ முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

 

மிஹின் லங்கா முன்னாள் நிறைவேற்று அதிகாரியான அனுர மஹேந்திர பண்டார, நீர்கொழும்பு தொழில் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்ற வழக்குக்கு சென்றுகொண்டிருந்த போது அவருடைய ஆவணங்களை இனந்தெரியாதோர் சிலர் அபகரித்து சென்றுவிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கறுப்பு நிறத்திலான டிபென்டர் ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினரே நுகேகொடை சுஹந்திராராம சந்தியில் வைத்து அவரை அச்சுறுத்தி ஆவணங்களை அபகரித்து சென்றுவிட்டதாக அவர் செய்துள்ள முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்த கணினி, பென்டிரைவ், மேலங்கி உள்ளிட்ட 2,45,000 ரூபாய் ஆகியவற்றையும் அபகரித்து சென்றுவிட்டதாக அந்த முறைபாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

wpengine

தாஜுதீன் கொலை வழக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கால அவகாசம்.

wpengine

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை

wpengine