உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

(FASTNEWS|COLOMBO) – மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று(02) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே குறித்த இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

வர்த்தக நிலைய சுற்றிவளைப்புகள் ஆரம்பம்

wpengine

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine