உள்நாட்டு செய்திகள்

மீண்டும் பொலிஸ் ஊடக குழு நியமனம்

பொலிஸ் ஊடக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவானது பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் இயங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நவீன தொழில்நுட்பங்களுடன் ஊடகங்களின் தகவல்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடக அமைச்சின் ஊடாக ‘தல்பதய் பன்ஹிந்தய்’ நிகழ்ச்சியின் கீழ்தெற்கிற்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களை சந்தித்த போது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்

wpengine

நாளை முதல் கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடத்த தடை…

wpengine

கரையோர ரயில் சேவையானது வழமைக்கு..

wpengine