கேளிக்கை

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட யுவதிகளுக்கு வழங்கப்பட்ட மார்பு கச்சைகளுக்குள் ஜெல் திரவம்..

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் வீடுகளை இழந்து நெற் களஞ்சியத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள இளம் யுவதிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மார்பு கச்சைகளுக்குள் மாத்திரை மற்றும் ஜெல் போன்ற திரவம் அடங்கிய பொதிகளும் வைக்கப்பட்டிருந்ததாக பிள்ளைகளின் தாய்மார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த மார்பு கச்சைகள் மற்றும் உள்ளாடைகளை பெண் ஒருவர் இலவசமாக வழங்கியதாக முகாம் நிர்வாகி ஜீ.ஜீ. சந்திரசிறி கூறியுள்ளார்.

குறித்த மாத்திரை மற்றும் ஜெல் திரவம் அடங்கிய பொதி மார்பு கச்சைகளுக்குள் வைத்து தைக்கப்பட்டுள்ளதாக தாய்மார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த மார்பு கச்சைகள் பெரியோருக்கு அல்ல பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அவற்றை வழங்கிய பெண் கூறியதாக முகாமில் தங்கியுள்ள பெண்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த விசாரணைகள் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

அமலாபால் இரண்டாவது திருமணம்…

wpengine

ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் கைகோர்க்கும் லொஸ்லியா

wpengine

நஷ்டத்தில் விழுந்த புலியினை நிமிர்த்தும் பணியில் தெறி

wpengine