உள்நாட்டு செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் இவர்கள் கைது​ செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 கிராம் கஞ்சா வைத்திருந்த நால்வரையும், 200 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு…

wpengine

இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதி திறப்பு [PHOTOS]

wpengine

இலங்கையில் ஜனாதிபதிகளது பாதுகாப்பு அதிசொகுசு வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு இன்று…

wpengine