கேளிக்கை

முகின் நடிக்கவிருக்கும் முதல் படம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நடிக்கவிருக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஸ்ரீடி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படமான இந்த படத்தின் கதாநாயகனாக முகின் நடிக்க உள்ளார். இந்த படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க இருப்பதாகவும் இது இவரது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’வெப்பம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று காலை வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் தமிழ் திரையுலகில் நாயகனாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாம் சீசன் டைட்டில் வின்னரும் நாயகனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் அவளது தாய் என்று தெரியாது… கீதா முதலைக் கண்ணீர்..?

wpengine

7 நாட்களில் பிரம்மாண்ட சாதனை 2.0 திரைப்படம்…

wpengine

13 வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் இணையும் பிரபல நடிகை…

wpengine