உள்நாட்டு செய்திகள்வணிகம்

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிப்பு…

பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு ஈடாக முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை சுய வேலை வாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வண்டிகளது சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்தினுள் இரண்டாவது கிலோமீட்டருக்கான பயணக்கட்டணமானது 40 ரூபாவில் இருந்து 50 ரூபா வரையில் உயர்வடையும் எனவும் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 60 ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

மத்திய மலை நாடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 60 ரூபா கட்டணமானது 80 ரூபா வரையிலும், இரண்டாவது கிலோமீட்டர் முதல் அறவிடப்படும் கட்டணமானது 50ரூபாவில் இருந்து 60 ரூபா உயர்த்தப்படும் எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நவெஸ்கா லேடி கொண்டு வந்த பெற்றோல் நுகர்வுக்குத் தகுதியானது என தெரிவிப்பு..

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

wpengine

கொட்டகலையில் மதுபானசாலை உடைப்பு

wpengine