Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன.

எனினும் அவை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பத்தரமுல்லை பிரதேசத்திற்கு மின்வெட்டு…

wpengine

முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகள் காலமானார்…

wpengine

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

wpengine