Top Story 2உள்நாட்டு செய்திகள்

முடங்கியது யாழ்.நகரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக நேற்று(26) மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாவது;

  • யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.
  • யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.
  • யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.
  • வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.
  • உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
  • யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

Related posts

புதிதாக 246 ஊழியர்களுக்கு கொரோனா

wpengine

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு

wpengine

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா [VIDEO]

wpengine