ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதலாம் திகதி முதல் யாசகத்திற்கான தடை அமுலுக்கு…

(FASTNEWS | COLOMBO)- எதிர்வரும் முதலாம் திகதி முதல் கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,

“…கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அமைவாக கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் பெறல் மற்றும் யாசகத்தை ஊக்குவித்தல் தடை செய்யப்படவுள்ளது.

இந்த தடையால் யாசகம் செய்பவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கருதுபவர்கள் பிரதேச சபையின் தலைமை செயலகத்தில் பதிவு செய்ய முடியும்.

இதன் மூலம் அவர்களுக்கான நல்வழிகளை காண்பிக்கும் நடைமுறையும் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகிறது..” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாரவில இளைஞன் காய்ச்சலால் உயிரிழப்பு – முந்தல் வைத்தியசாலைக்கு பூட்டு

wpengine

மத்தளையில் இருந்து அகற்றப்படும் மான்கள் !

wpengine

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 1/2 வயதுக் குழந்தை

wpengine