உள்நாட்டு செய்திகள்

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து  செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்  

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றிற்கிடையிலான ஒப்ந்தத்தின்  ஒரு அங்கமாக, தனியார் மருத்துவ கல்லூரி ஏற்படுத்துவதாயின் அதற்கான  முன் அனுமதியை இலங்கை மருத்துவ சபையிடமிருந்து பெற்றுகொள்ளப்படல் வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
SAITM இவ் அனுமதியை பெற்றுகொள்ளாமல் அதன் மருத்துவ கல்லூரியை ஆரம்பித்துள்ளதால் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர், மருத்துவர் ஹரித்த அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் பிரதமமந்திரியின் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் பற்றி வலியுறுத்தப்படும் எனக்  கூறினார்.

Related posts

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட அலுவலகம்…

wpengine

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

wpengine

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

wpengine