உள்நாட்டு செய்திகள்

முத்துராஜவல ஈர வலயம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு – விரைவில் வர்த்தமானி அறிவித்தல்…

முத்துராஜவல ஈரநில வலயத்தின் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சொந்தமான பகுதியை வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்குவது சம்பந்தமான இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வௌியானதன் பின்னர் குறித்த அதிகார சபைக்கு சொந்தமான பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக மாற்றும் சட்டபூர்வ அதிகாரம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைக்கும்.

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட சுற்றுச் சூழல் வலயத்தை வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை, காணி திணைக்களம், நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகிய அரச அதிகதாரிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சொந்தமான பாதுகாப்பட்ட பகுதி வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரிமையாவதுடன், அது வனஜீவராசிகள் வலயமாக பாதுகாக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வலப்பனை – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

wpengine

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி நுகேகொடயில் இருந்து ஆரம்பம்..

wpengine