உள்நாட்டு செய்திகள்

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பாதுகாப்பு சுவரொன்றை உடைத்து அகற்றிய சம்பவம் தொடர்பில்  4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி கிரிபத்கொடையை சேர்ந்த ஹசித நாணாயக்கார என்ற நபருக்கு சொந்தமான பாதுகாப்பு சுவரொன்றை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பில் அவரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக கிரபத்கொடை முன்னாள் காவற்நிலைய பொறுப்பதிகாரி ,களனி பிரதேச செயலகத்தின் முன்னாள் தலைவர் பிரசன்ன ரணவீர மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட 7 பேர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Related posts

கம்பளையில் பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பவம், 3 மாணவர்கள் பாதிப்பு – பொலிசார் மறைப்பதற்கு முயற்சியா..!

wpengine

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

wpengine

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine