Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட நிஜாம் ஜமால்தீனுக்குச் சொந்தமான மாத்தறை வெலிகமவில் உள்ள W-15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிர்வாக சபை, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணம் கொடுத்ததா? என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் அமைச்சரிடம் வினவியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

UPDATE – கெசல்வத்தை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது.

wpengine

மஹிந்த தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

239 பேருடன் காணாமல் போன மலேஷியா விமானத்தின் பாகங்கள் பிலிப்பைன்ஸ் தீவில்

wpengine