உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித்தவுக்கு ஜப்பான் செல்ல நீதிமன்றம் அனுமதி.

முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாடு செல்வதற்கு ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு விடுக்கப்பட்ட தடையுத்தரவை தற்காலிகமாக நீக்கிக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரதன,  இந்த உத்தரவை இன்று(17) பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, 1 மாதகாலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில்  மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.

நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை ஜப்பானில் இடம்பெறும்  மத மற்றும் கலாசார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல பாகங்களுக்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

wpengine

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத்தடுப்பு பிரிவினரிடம்…

wpengine

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine