உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை 09.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவரின், செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில், வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் மஹிந்தவிடம் குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரது இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.

எப்படியிப்பினும் நாளைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விக்கப்பட்டுள்ளதாக லெஸில் டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி..

wpengine

04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..

wpengine

முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண்

wpengine