உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று(30) குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதிவாதிகளுக்கு இன்று குற்றப் பத்திரிகை வழங்கப்படவிருந்தது.

எனினும் குறித்த வழக்குடன் தொடர்புடைய திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.

இதன்படி குற்றப் பத்திரிகை வழங்கும் நடவடிக்கையை ஒக்டோபர் 19ம் திகதி வரை ஒத்திவைக்க மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை…

wpengine

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு..!

wpengine

கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine