ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முல்லைத்தீவில் குடியேற ஞானசார தேரர் தீர்மானம்; வட மாகாணத்தில் குழப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குடியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பகே மேதாலங்கார தேரரின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

இதனால் வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று முதல் உரிய ஆடையில் வர அனுமதி….

wpengine

புத்தாண்டை முன்னிட்டு வாகனம் செலுத்துவோருக்கு விசேட அறிவித்தல்…

wpengine

ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் வித்தியாசமான இரட்டை சகோதரிகள்

wpengine