உள்நாட்டு செய்திகள்

முழந்தாளிடல் : இராணுவ அதிகாரிகள் பதவிநீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏறாவூர் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியில் பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று முழந்தாளிட வைத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

wpengine

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

wpengine

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine