உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு சேர்வதில் நிலைத் தடுமாற்றத்தில்

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று மாலை விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு வழங்குவதில் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த ஒப்பந்தங்களினாலே இவ்வாறான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும், இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம் தலைமையில் மேலும் பல கலந்துரையாடல்கள் இடம்றெவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(riz)

Related posts

முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை கண்டனத்திற்குரியது – அமேரிக்கா..

wpengine

சனா இணை பின்தள்ளி சங்கா சாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார்..

wpengine

இன்று மாலை காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் போக்குவரத்து மட்டு…

wpengine