ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முஸ்லிம் பெண்களது சிறு வயதுத் திருமணம் என்பது ஒரு கொடுமையான அனுபவமே…

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களை சிறு வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் அனுபவம் கொடுமையானது என அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார்.

கொழும்பு-12, குணசிங்கபுர, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“..பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் நிகழ்வின் காரணமாக முஸ்லிம் பெண்களில் படித்த தலைமுறையொன்றை உருவாக்கும் விடயம் சவாலாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் ஆண்களும் வருமானமீட்டும் நோக்கில் கல்வியை இடைநிறுத்தி நடைபாதை வியாபாரிகளாக, முச்சக்கர வண்டி சாரதிகளாக மாறிவிடுவதன் காரணமாக குறித்த தொழில்கள் அவர்களின் பரம்பரைத் தொழிலாக மாறி விடுகின்றன. தந்தை செய்த தொழிலை தனயனும் மேற்கொள்ளும் அவல நிலையே கொழும்பில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை மாற வேண்டும். கல்வியில் உயர் நிலையை அடைய வேண்டும் என்றால் சிற்சில தியாகங்களை செய்தாக வேண்டும்…” என அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

#g-reeshma

Related posts

நவீன உலகில் பிரபலங்களும் சுய இன்பங்களது ஆய்வுகளும்

wpengine

இயக்குனராக அவதாரமெடுக்கும் ப்ரியாமணி!

wpengine

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க மறுக்கிறார் மோடி…?

wpengine