உலக செய்திகள்

‘மெகி’ இனால் சீனா சுழன்றது – இதுவரை ஐவர் பலி.

சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ‘மெகி’ சூறாவளி  சீனாவின் வடமாகாணமான பியூஜியானை தாக்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்  பாதுகாப்பாக அனுப்பட்டுள்ளதோடு,  குறித்த பகுதியின் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த சூறாவளியின் காரணமாக 5 பேர் பலியானதுடன், 100 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்காவில் இடமில்லை

wpengine

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது

wpengine

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

wpengine