ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேக்ஸ்வெல்லுக்கு மனநல பிரச்சினை; அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அவுஸ்திரேலியா கிரிக்கெட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதனால் கிளென் மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா சர்வதேச அணியில் இருந்து விலகியுள்ளார் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக உளவியலாளர் வைத்தியர் Michael Lloyd கூறியதாவது,

நல்வாழ்வையும், விளையாட்டில் அவர் மீண்டும் ஒன்றிணைவதையும் உறுதிசெய்ய அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஊழியர்களுடன் ஒத்துழைக்கும்.

எல்லோரும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இந்த நேரத்தில் அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் பிராத்தனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட்டில் இருந்து ஒரு ‘குறுகிய’ ஓய்வு எடுப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில், மேக்ஸ்வெலுக்கு பதிலாக D’Arcy Short அவுஸ்திரேலியா அணியில் சேர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகக் கிண்ணம் வரும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெரும் அணி தொடர்பில் டேரன் சமி ஆரூடம்

wpengine

ரத்ன தேரரின் விகாரைக்கு சென்ற காரணத்தினை வசந்த கூறுகிறார்…

wpengine

மகப்பேற்று அறுவை சிகிச்சை அறையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம்!

wpengine