ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேர்வின் சில்வாவின் ‘வீர துட்டகைமுனு இயக்கம்’ 23ம் திகதி அங்குரார்ப்பணம்…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கமானது எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவிக்கையில்;

“.. சிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது. அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும்..

மஹிந்த ராஜபக்ஷவின் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்ப்பதற்கு தவறியுள்ளன. இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றனர்..” என தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு – பிரதான சந்தேக நபருக்கு 12 வயது

wpengine

ஏறாவூரில் பிசு பிசுத்துப்போன SLMC இன் பிரசாரக்கூட்டம்

wpengine

விளையாட்டுப் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் சேட்டை..

wpengine