உலக செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கனமழை – 8 பேர் பலி..

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பெய்து வரும் தொடர் மழையினால்  கினியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளான செனகல், செய்ரோ லியோன், கினியா ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில்  செய்ரோ லியோன் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பலர் காணாமல் போயுள்ளதாகவும் உயிரிழந்தோர்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு..!

wpengine

அதிபர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் – ஒபாமா

wpengine

ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு – தாக்குதலை பொறுப்பேற்றது தாலிபான்

wpengine