உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.

எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிளாஸ்ரிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

wpengine

குசல் ஜனித் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோவுக்கு கொவிட்..!

wpengine

PTA இற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெறுகின்றது..!

wpengine