Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பெவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளாட்டினம் பிரிவில் மஹேலவுடன் இணையும் மாலிங்க..

wpengine

தேசிய அரசியலில் பாரிய மாற்றம்

wpengine

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் TID பணிப்பாளருக்கு கடிதம்

wpengine