உள்நாட்டு செய்திகள்

மேலும் 24 நகரங்கள் முடங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் மேலும் 24 நகரங்களில் உள்ள கடைகளை மூட வர்த்தக சங்க தலைவர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கங்களின் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த நகரங்களில் மருந்து கடைகள், எரிவாயு நிரப்பு நிலையங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மாத்திரமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 34 நகரங்களில் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன, மூடக்கப்பட்டுள்ள நகரங்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உள்ளது.

அதற்கமைய, பிபில, மொனராகலை, மெதகம, சியம்பலான்டுவ, புத்தள, எம்பிலிப்பிட்டிய, அயகம, கிரிஎல்ல, பதுளை, ரக்வானை, கொடகவெல, நொச்சியாகம, கெப்பட்டிபொல, ருவன்வெல்ல, திருகோணமலை, ஹாலிஎல, கனேமுல்ல, தவலம, கும்புருப்பிட்டிய, பதியலெல்ல, இமதுவ, ஹட்டன், கொட்டகலை, பதியதாலவ ஆகிய நகரங்களின் கடைகளே இவ்வாறு இன்று முதல் மூடப்படவுள்ளன.

கம்பஹா, அம்பலன்தொட்டை, அம்பலங்கொடை, மரதகஹமுல, வேயன்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, உல்பத்த, தங்கல்ல, பதுளை, பலங்கொடை, வலப்பனை, பண்டாரவெல, மாத்தளை, யட்டவத்த யேலக்கர, அநுராதபுர, சிலாபம், அம்பாறை, வென்னபுவ, கெக்கிராவ, மொனராகலை, தம்புள்ளை, கஹவத்தை, திவுலபிட்டிய, தெரணியகல, ஊருகஸ்மஹந்திய, பல்லேபொல, அலவ்வ மற்றும் யாழ்ப்பாண நகரங்களின் வர்த்தக நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை

wpengine

அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு – ஒரு கிலோ கரட் 2000 ரூபா..!

wpengine