Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

————————————————————————-[UPDATE 19.50 PM]

மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3483 ஆக அதிகரித்துள்ளது

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தப்பிய மகிந்த – நாமல் பெயர்களை காணவில்லை!

wpengine

அருட்தந்தை சிறில் காமினி CID’யில்

wpengine

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

wpengine