உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், தங்காலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்த நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

கடந்த 29 ஆம் மற்றும் 30ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு டெப் கணணி வழங்குவதை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானம்…

wpengine

முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

wpengine