உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண முதலமைச்சரிடமிருந்து மனுத்தாக்கல்

தன்னை கைதுசெய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் வேண்டி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அவர் அவரது அடிப்படி உரிமை மனுவில் தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கை நிறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவையிலுள்ள மாகாண சபைக்குரிய காணியை விற்பனை செய்வதற்காக மொரட்டுவையில் உள்ள வர்த்தகரிடம் 65 மில்லியன் ரூபாய் கேட்டதாகவும் அதில் 8 மில்லியன் ரூபாவை பெற்றுகொண்டதாகவும் கூறி தனது மனைவியிடம் கொள்ளுப்பிட்டியிலுள்ள நிதி மோசடி பிரிவினர் விசாரணை நடத்திவருவதாகவும் அவர், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

 

Related posts

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

wpengine

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை TID யிடம் ஒப்படைக்க பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

wpengine

வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகங்களுக்கு நெருக்கடி..

wpengine