உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு

(FASTNEWS | COLOMBO) – மேல் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று கடுவலை பிரதேசத்தைச் ​சேர்ந்த சிரிசென தொலவத்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உள்ளிட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த எப்ரல் 21ம் திகதியுடன் மேல்மாகாண சபையின் காலம் நிறைவடைந்துள்ள போதிலும் தேர்தல் நடத்தப்படாமையால் அந்த மாகாணத்தில் வாழும் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் குறித்த மனுவில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதியமைச்சராக அமைச்சர் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படலாம் என ஊகம்…?

wpengine

சைட்டம் எதிர்ப்பு தரப்பினரின் நிகழ்வில் வைத்தியர்களிடையில் முறுகல்..

wpengine

ஜூலை 4ம் திகதி நள்ளிரவு தொடக்கம் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்?

wpengine