உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் ஆசைப்படுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விசேட செவ்வியின் போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்ப்பது எனது பிரார்த்தனையாக அமைந்திருந்தது.

தனியார் வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வரும் நிலையில் அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால்
அது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுடந்தான் போட்டியிடுவேன் என பசில் ராஜபக்ஷ இங்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசாங்கத்தில் பிரதமராவதனை தடுத்த பிரதான நபராக பசில் ராஜபக்ஷ மீது அரசியல் வட்டாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Azeem Kilabdeen

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு

wpengine

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine