உள்நாட்டு செய்திகள்

மைத்திரி இன்றும் ஆணைக்குழுவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று எட்டாவது தடவையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (25) முற்பகல் அங்கு வருகை தந்த அவர், கடந்த வருடம் ஏப்ரல் 21இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (24) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரான அவர், சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக சாட்சியம் அளித்த பின் அங்கிருந்து வெளியேறியதோடு, இன்றையதினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பா.உறுப்பினர்களுக்கான செயலமர்வு

wpengine

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு…

wpengine