ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி மற்றும் விமல் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று(11) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

குறித்த இந்த சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பிரதி தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை, பலவந்தமாக காணாமல் போதல் பற்றிய சர்வதேசத்தின் தீர்மானங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(riz_mira)

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளில் நாளை மாற்றம்!

wpengine

ஆர். சம்பந்தனை நலம் விசாரிக்க சென்ற தந்தையும் மகனும்..

wpengine

முழு பூமியும் பௌத்த பூமியாகும் – ஞானசார தேரரின் கருத்தால் பரபரப்பு [VIDEO]

wpengine