உள்நாட்டு செய்திகள்

மொனராகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி…

மொனராகலையில் இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குடாஓயா, ஊவ குடாஓயா பகுதியில் நேற்றிரவு(13) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூவருக்கு இடையில் காணப்பட்ட தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மொனராகலை கெவிந்துபுர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

wpengine

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நாளை சாட்சியம் அளிக்க முன்னாள் காவற்துறை மா அதிபர் இளங்ககோன்

wpengine

திலின கமகேவை நீதிமன்றில் ஆஜர்படுத்த CIDக்கு சட்டமா அதிபர் ஆலோசனை

wpengine