உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த களுகங்கை நீர்தேக்கத்திற்கு 2வது முறையாக நீர்பாய்ச்சும் நிகழ்வு 23 அன்று…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இம்மாதம் 23ம் திகதி மொரகஹகந்த களுகங்கை நீர்தேக்கத்திற்கு இரண்டாவது முறையாக நீர்பாய்ச்சும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரகஹகந்தையை அண்மித்து உள்ள களு கங்கயை மறித்து நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நீர்த்தேக்கத்தின் நீரும் மொரகஹகந்த நீர்ப்பானத் திட்டத்துடன் இணைக்கப்படவுள்ளது.

இதன் நீரைக் கொண்டு 300,000 ஏக்கரில் புதிதாக நெற் செய்கையை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 15 இலட்சம் விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

அத்தோடு மேலும் மூன்று இலட்சம் பேர் சுத்தமான குடிநீரை பெறவுள்ளனர்.

இந்த நீர்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு ஆறு இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் அடிகள், என்பதுடன் இது பராக்கிரம சமூத்திரத்தை விட ஆறு மடங்கு கொள்ளளவு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

R.Rishma

Related posts

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்! தமிழக முதல்வரின் அறிவிப்பு!

wpengine

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine