Top Story 3உள்நாட்டு செய்திகள்

மோசமான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசியாவின் மிக மோசமான ஏழ்மையான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.உலகின் பிரபலமான பொருளாதார ஆய்வு மற்றும் தகவல் இணையத்தளமான யாகூ பினான்ஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் மிக ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கை 17வது இடத்தில் உள்ளது.முதலாம் இடத்தில் வடகொரியாவும், இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளன. சார்க் நாடுகளில் இலங்கை தவிர பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே இலங்கை இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிப்பு…

wpengine

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை..!

wpengine

மசகு எண்ணை எடுத்துச்செல்லும் குழாய் ஒன்றில் கசிவு

wpengine