உள்நாட்டு செய்திகள்

யால’வின் மூடப்பட்ட வலயம் திறப்பு…

சுற்றுலாத் தளத்தைப் புனரமைப்பு செய்வதற்காகவும் விலங்குகளின் சுதந்திரத்தை கருத்திற் கொண்டும் மூடப்பட்ட யால தேசிய சரணாலயத்தின் 01ம் இலக்க வலயத்தின் ஒரு பகுதி, சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று(30) திறக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் யால சரணாலயத்தின் 01ம் இலக்க வலயம் மூடப்பட்டிருந்ததோடு, அதன் வலய இலக்கங்களான 2,3,4 ஆகியவை திறந்து விடப்பட்டிருந்ததாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதன்படி, வலய இலக்கம் 01 இற்கு உள்நுழைவதற்கு பற்றுச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை இன்று(30) முதல் ஆரம்பமாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை எரித்த கணவன்

News Editor

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! – அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

wpengine

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

wpengine