ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி யாழ். நகரப் பகுதியில் வைத்து, ஆசிரியரான சண்முகவேல் மாதவமணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும் சிலரால் தாக்கப்பட்டனர்.

இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்தில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி கெமராவினை பரிசோதனை செய்த யாழ்ப்பாணம் சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அரசடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் பின்னர் மண்கும்பாண் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போது, இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில்…

wpengine

ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிக்காவின் புதல்வர் களத்தில்

wpengine

கிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் இவர்தான் – விராட் கோலி

wpengine