Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது .

கொழும்பைப் போன்று கொரோனா வைரசு தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள். மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம்.என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

Related posts

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்

Azeem Kilabdeen

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

wpengine

இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…

wpengine