வணிகம்

யாழில் 02 உற்பத்தி வலயங்கள் அமைக்க தீர்மானம்…

நிலக்கடலை, மிளகாய் , மாம்பழ உற்பத்திக்காக யாழ்ப்பாணத்தில் இரண்டு வலயங்கள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வுகள் நாளை கணேசபுரம் பிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது நாட்டில் நிலக்கடலை மற்றும் உழுந்து உற்பத்தி நாட்டின் தேவைக்கு போதுமானதாக அமையவில்லை என்பதுடன், இந்தியாவிலிருந்து நிலக்கடலையும் உழுந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டில் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்காக 689 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், உழுந்த இறக்குமதிக்காக இதே காலப்பகுதியில் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3,960 கோடி ரூபா வருமானம்…

wpengine

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுஸிற்கு அழைப்பு.

wpengine

பண்டிகைக் காலத்திற்கு தேவையான அளவு பொருட்கள் இறக்குமதி

wpengine