உள்நாட்டு செய்திகள்

யாழ் மாவட்டத்தில் சகல பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து…

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை நேற்று(19) மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணமாக இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடு​முறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரகர் வீரர் தாஜுடீனின் கொலையுடன் பல முக்கியர்கலுக்கு தொடர்பு – புலனாய்வு பிரிவு

wpengine

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

wpengine

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 16 மாணவர்கள் கைது

wpengine