விளையாட்டு

யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறுகிறார் ரொனால்டோ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவர் 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக 2018-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார்.

இந்த நிலையில் அவர் இந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார். யுவென்டஸ் அணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று அவர் தன்னிடம் கூறியதாகவும், அதனால் அவர் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் மாசிம்லியனா அலெக்ரி நேற்று தெரிவித்தார்.

ரொனால்டோ அடுத்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்காக விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அவரை தங்கள் அணிக்கு மாற்றுவதற்கு, யுவென்டன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக மான்செஸ்டர் யுனைடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மான்செஸ்டர் சிட்டி கிளப் அவரை இழுக்க முயற்சித்து பின்வாங்கியதுகுறிப்பிடத்தக்கது.

Related posts

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…

wpengine

ஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார்

wpengine

பங்களாதேஷ் VS இலங்கை, ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எச்சரிக்கை..

wpengine