ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யோஷித தந்தையிடமும் கொமிஸ் பெற்றது அம்பலம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தேர்தல் பிரச்சாரங்களுக்கான அச்சிடுதல் குறித்த வேலைகளை பொறுப்பேற்று செய்த யோஷித ராஜபக்ஷ, குறித்த அச்சிடல் தேவைக்கான பணத்தில் ஒவ்வொரு அச்சிடளுக்கும் 15% கொமிசன் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே குறித்த தகவலானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு பசில் ராஜபக்ஷவிடம் இருந்ததால், அப்பொறுப்பை நாமல் மற்றும் யோஷித கூட்டிணைந்து பசில் ராஜபக்ஷவினை ஓரங்கட்டி தம் வசப்படுத்தியிருந்தனர்.

மேலும், தேர்தல் வியாபர நிதி நடவடிக்கைகளை கண்காணித்த மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத்னவிடம் வலுக்கட்டாயமாக நாமல் மற்றும் யோஷித பண மோசடியில் ஈடுபட்டதாகவும் தேர்தல் ஆணையக அதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இன்னும், அதிகாலையிலேயே காமினி செனரத்னவிற்கு அழைப்பினை மேற்கொண்டு “இன்று மாலை 3மணிக்கு முன் 50மில்லியன் வேண்டும்.. நாளை மதியம் 12 மணிக்கு முன் 100மில்லியன் வேண்டும்..” என மிரட்டல் விடுப்பதாகவும், ஒரு சமயம் தொல்லை தாங்காது காமினி, ” இப்போது நான் பணம் அச்சிட்டுத் தான் தரவேண்டும்” எனவும் பதிலளித்துள்ளார். அதற்கு மிரட்டல் விடுத்த யோஷித ராஜபக்ஷ ” அப்படிஎன்றால் உங்கள் பொஸ் இடம் கூறுங்கள், இன்று மாலை 6மணிக்கு பின்பு கேம்பேனினை நிறுத்துவதாக..”

யோஷித மற்றும் நாமலின் குறித்த தொல்லை தாங்காது, காமினி செனரத்திற்கு; தம்மிக்க பெரேரா, சுமல் பெரேரா, நிமல் பெரேரா மற்றும் ரவி விஜேரத்ன முதலிய வியாபாரிகளிடம் இன்னுமின்னும் பொய் ஒப்புதல்களை கூறவேண்டியதாயிற்று. இறுதியில் மேற்சொன்ன வியாபாரிகளால் அப்பாவி காமினி புறந்தள்ளப்பட்டுள்ளார்.

ஜனவரி 9ம் திகதி இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தில் ஏறத்தாள 150 மில்லியன் ரூபாவினை அலறி மாளிகைக்கு பிரியாணி சப்ளை செய்யும் முஸ்லிம் வியாபாரியான முஸ்தாக் என்பவருக்கு “துபாய் பாய்” தந்ததாக வழங்கியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், குறித்த பணத்தினை மீளப்பெற யோஷித ராஜபக்ஷ தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இற்றை வரை பெறமுடியாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஷெலின்டாவுக்கு ஹரீன் இறுதி நேரத்தில் வழங்கிய கடிதத்தினால் சர்ச்சை

wpengine

மாத்தறையில் அண்மையில் கொலை செய்யப்பட்ட மாணவனுக்கு பேரூந்து நிலையத்திலும் தாக்குதல் – கசிந்தது CCTV காணொளி…

wpengine

உலகில் பலமான வல்லரசு நாடுகளே பயங்கரவாதத்திற்கு தீனி போடுகின்றது…

wpengine