உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் ஆயுத விற்பனையிலும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

Related posts

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து..

wpengine

மூதூர் தளவைத்தியசாலை குறித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

wpengine

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான அநீதி

wpengine

4 comments

rimzan Jun 23, 2015 at 9:22 am

கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்து உரிய முறையில் விசாரித்தால் உண்மை வரும்

nana Jun 23, 2015 at 9:23 am

சிறையில் அடைத்தால் சரியா???

kamal Jun 23, 2015 at 9:25 am

ஏன்

kanchana Jun 23, 2015 at 9:34 am

அரசியல் வாதிகளின் சிறை 24 மணி நேர உயர் பாதுகப்புடன் டீ.வி ரேடியோ என தனி அறையில் சொகுசாக தானே இருக்கிரார்கள் உள்ளேயும் பாதுகாப்பு வெளியிளும் பதுகாப்பு என்ன சட்டம் இது

Comments are closed.