உள்நாட்டு செய்திகள்

ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை…

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, அவருடைய சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 06 ஆம் திகதி, யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம், சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்தியில் உள்ள வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் படைப்புழுத் தாக்கம்

wpengine

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

wpengine

இஷாராவின் தாய், சகோதரன் தடுப்புக்காவலில்

Azeem Kilabdeen