கேளிக்கை

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றியது மாஸ்டர் படக்குழு (PHOTO)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

இதனிடையே சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Related posts

திருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் சிங்… (photo)

wpengine

நயன்தாராவின் ஒரே பயத்தை போக்கிய சமந்தா…

wpengine

மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்கும் பிரபலங்கள்…

wpengine