ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரஜினி படத்தில் விஜய் பட வில்லன்?

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். பாலிவுட்டை சேர்ந்த நீல் நிதின் முகேஷ் இந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘எந்திரன்-2’ படத்தில் நீல் நிதின் முகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் நீல் நிதின் முகேஷை படக்குழுவினர் நேரடியாக சென்று சந்தித்ததாகவும், கதையை கேட்டறிந்த நீல் நிதின் முகேஷ், இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் டிசம்பர் 12-ந் தேதி ரஜினி பிறந்தநாளில் அறிவிப்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இந்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர். சென்னை பழைய நிலைக்கு திரும்பியதும் ‘எந்திரன்-2’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பௌத்த துறவி கங்கையில் குதிப்பு ; தேடுதல் வேட்டை

wpengine

இறப்பதற்கு முன்னர் பாராளுமன்றம் செல்வது உறுதி… – மேர்வின் சவால்…

wpengine

சர்வதேச அளவில் பிரபலமான DOVE இனவெறியை தூண்டுகிறது… – மன்னிப்புக் கோரியது Unilever நிறுவனம்.. (Video)

wpengine